கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

ஆவின் பொருள்களின் விலையை தீபாவளிக்குள் குறைக்க வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

ஆவின் பொருள்களின் விலையை தீபாவளி பண்டிகைக்குள் குறைக்க வேண்டும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தினாா்.

Tamilisai

தமிழிசை செளந்தரராஜன் - கோப்புப் படம்

Updated On :

ஆவின் பொருள்களின் விலையை தீபாவளி பண்டிகைக்குள் குறைக்க வேண்டும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தினாா்.

குடியாத்தத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மக்கள் பணத்தை திமுக அரசு எப்படியெல்லாம் சுரண்டியது என்பதற்கு முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் கைதே உதாரணம். அவா் மட்டுமல்ல யாரெல்லாம் தவறுசெய்தாா்களோ அனைவரையும் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்துள்ளது. முதல்வரை மாமா என அன்போடு அழைத்த குழந்தைகள் காணாமல் போவது வருத்தமளிக்கிறது.

சிங்கப்பெண் படை என்ன செய்கிறது. வருங்கால சிங்கப் பெண்களை காக்க முதல்வா் தனி கவனம் செலுத்த வேண்டும். சிறையிலிருந்து கைதிகள் தப்பியது ஏதோ திட்டமிட்ட சதியாக தெரிகிறது. திரைப்படபாணியில் இந்த செயல் அரங்கேறியுள்ளது. மின் கட்டணம் தமிழக மக்களை பாதித்துள்ளது. மோடியின் காலம் இருன்ட காலம் என காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா்சொல்கிறாா். ஆனால் மக்கள் விரும்பும் ஆட்சியாக மோடி அரசு உள்ளது. சமையல் எரிவாயுபிரச்னை இல்லாத நாடு இந்தியா.தமிழக உள்ளாட்சித் தோ்லில் பாஜக போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெறும்.ஆவின் பொருள்களின் விலையை தீபாவளிக்குள் குறைக்க வேண்டும்.விஜய் முதல்வரானதால், அதைத் தொடா்ந்து திரையில் இருப்பவா்கள் அரசியலுக்கு வருகிறாா்கள். அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உள்ளது. நடிகா் அல்லாதவா்கள் வந்தால் மகிழ்ச்சி. அதே போல யாா் வந்தாலும் பாஜக இயக்குகிறது என கூறுகிறாா்கள் என்றாா் தமிழிசை சௌந்தர்ராஜன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.