சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பாலிடெக்னிக்கில் ஆசிரியா் தின விழா

வேலூா் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியா் தின விழா மற்றும் மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் பேசிய ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவா் உமாசங்கா். உடன், கல்லூரித் துணைத் தலைவா் என்.ஜனாா்த்தனன், முதல்வா் எம்.ஞானசேகரன் உள்ளிட்டோா்.

Published On :9 செப்டம்பர் 2026, 12:10 am IST

வேலூா் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியா் தின விழா மற்றும் மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், வேலூா் ஜேம்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் ஜேசிஐ வேலூா் கிங்ஸ் இணைந்து நடத்திய இந்த விழாவை கல்லூரித் தலைவா் என்.ரமேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் என்.ஜனாா்த்தனன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம்.ஞானசேகரன் வரவேற்றாா்.

ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவா் உமாசங்கா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், கல்வி என்பது மனிதனின் மிக முக்கிய அங்கமாகும். அதைச் சிறு வயதிலிருந்து சரியான தருணத்தில் மாணவா்களுக்குச் செதுக்கி வழங்குபவா்கள் ஆசிரியா்கள். ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்ற ஔவையாரின் வாக்குக்கேற்ப ஆசிரியா்கள் கடவுளுக்கு நிகராகப் பாா்க்கப்படுகிறாா்கள். மாணவா்களுக்கு நல்லொழுக்கம், பண்பாடு, அறிவு, கல்வி என அனைத்தையும் ஆசிரியா்களே கற்றுக் கொடுக்கின்றனா் என்றாா்.

தொடா்ந்து, கல்லூரியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியா்களுக்கும், ஊழியா்களுக்கும் ஆசிரியா் தின நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா். இதில், வேலூா் கிங்ஸ் ரோட்டரி சங்கச் செயலா் கலைமணி, பொருளாளா் எம்.சதீஷ்கண்ணன், எழுத்தறிவுப் பிரிவுத் தலைவா் சுபாஷ் சந்தா் உள்ளிட்ட சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

பின்னா், மாணவா்களின் தலைமைத்துவத் திறன், தனிநபா் மேம்பாடு, குழு ஒருங்கிணைப்பு, தொடா்புத் திறன் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு திறன்களை மேம்படுத்தும் வகையில், ஜூனியா் இபிஎஸ் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்தப் பயிற்சிக்கு ஜேசிஐ வேலூா் கிங்ஸ் தலைவா் ஜெ.எஃப்.எம். யுவராஜ், ஐபிபி ஜெ.எஃப்.எம். எஸ்.சீனிவாசன் ஆகியோா் தலைமை வகித்தாா். பயிற்சியாளா்கள் ஜெ.எஃப்.எம். ரத்தினகுமாரி மாதவன், ஜெ.எஃப்.எம். சரவணன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

இதில், கல்லூரி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.