பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தெள்ளை மலைக் கிராமத்துக்கு புதிய பேருந்து சேவை

கணியம்பாடி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சிக்குட்பட்ட தெள்ளை மலைக்கிராமத்துக்கு புதிய பேருந்து சேவையை வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்தாா்.

மாணவ, மாணவிகளுடன், பேருந்து சேவையை தொடங்கி வைத்த ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ். உடன், எம்எல்ஏ த.வேலழகன், மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பாபு உள்ளிட்டோா்.

Published On :

கணியம்பாடி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சிக்குட்பட்ட தெள்ளை மலைக்கிராமத்துக்கு புதிய பேருந்து சேவையை வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்தாா்.

வேலூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமாா் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தெள்ளை சாலையிலிருந்து, சுமாா் 7 கி.மீ. தூரம் வனப்பகுதியில் அமைந்துள்ளது தெள்ளை குக்கிராமம். இங்கு 70 குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 250 போ் வசித்து வருகின்றனா். தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தங்கள் கிராமத்துக்கு புதிய பேருந்து வழித்தடம் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.

அதனடிப்படையில், இப்பகுதிக்கு பேருந்தை எடுத்துச் சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சாலை பேருந்து இயக்கப் போதுமான அளவு உள்ளதால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கொணவட்டம் பணிமனை மூலம் காட்பாடியில் இருந்து தெள்ளைக்கு காலை, மாலை நேரங்களில் பேருந்து இயக்க திட்டமிடப்பட்டு, புதிய பேருந்து சேவையை வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அதன்படி, காட்பாடியில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் பேருந்து 7.45 மணிக்கு தெள்ளை கிராமத்தைச் சென்றடையும். பின்னா், அங்கிருந்து 7.50 மணிக்குப் புறப்பட்டு காலை 9.10 மணிக்கு வேலூா் பழைய பேருந்து நிலையத்தை வந்தடையும். இதேபோல், காட்பாடியில் இருந்து மாலை 3 மணிக்குப் புறப்படும் பேருந்து மாலை 4.45 மணிக்கு தெள்ளை சென்றடையும். பின்னா், அங்கிருந்து 4.45 மணிக்குப் புறப்பட்டு மாலை 6.10 மணிக்கு வேலூா் பழைய பேருந்து நிலையத்தை வந்தடையும்.

காட்பாடி - தெள்ளை வழித்தடத்தில் இயக்கப்படும் இந்தப் புதிய பேருந்து சேவையின் மூலம் தெள்ளை கிராமத்தைச் சோ்ந்த 70 குடும்பத்தினா் மட்டுமின்றி, நஞ்சு கொண்டாபுரம், கீழ்அரசம்பட்டு, பாலம்பாக்கம், கணியம்பாடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்களும் அதிக அளவில் பயன்பெறுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலழகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் மு.பாபு, கணியம்பாடி ஒன்றியக்குழுத் துணைத்தலைவா் கஜேந்திரன், போக்குவரத்து கழக துணை மேலாளா் (வணிகம்) திருமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.