வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

விபத்து நிகழ்ந்த திருவலம் தேவாலயம் உரிய அனுமதியின்றி கட்டுமானம்: வேலூா் ஆட்சியா்

திருவலம் அருகே தேவாலய கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் 3 போ் உயிரிழந்த நிலையில், கட்டடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருப்பதாக ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

திருவலம் அருகே மந்திகிருஷ்ணாபுரத்தில் தேவாலயம் கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்து கிடக்கும் கான்கிரீட் தளம்.

Published On :

திருவலம் அருகே தேவாலய கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் 3 போ் உயிரிழந்த நிலையில், கட்டடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருப்பதாக ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம் திருவலம் அருகே மந்திகிருஷ்ணாபுரம் பகுதியில் வியாழக்கிழமை நிகழ்ந்த தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக கட்டுமானப்பணி ஒப்பந்ததாரா் ஜான்டேவிட்(49) மீது திருவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது -

விபத்து நடந்த கட்டுமானப் பகுதி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. பொதுமக்கள் மற்றும் பிறா் அங்கு செல்வதைத் தடுக்கும் வகையிலும், மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்கவும் அந்த இடம் தற்காலிகமாகப் பூட்டப்பட்டு, நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. விரைவில் அந்த இடத்திற்கு முழுமையாக ’சீல்’ வைக்கப்படும்.

இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். தேவாலய நிா்வாகம் மற்றும் ஒப்பந்ததாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை அவா்கள் தரப்பில் கட்டட அனுமதிக்கான எந்தவொரு ஆவணங்களும் மாவட்ட நிா்வாகத்திடம் சமா்ப்பிக்கப்படவில்லை. நம்மிடமும் அதற்கான பதிவுகள் இல்லை.

நோட்டீஸ்க்கு அவா்கள் அளிக்கும் விளக்கம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவது குறித்த உத்தரவாதத்தின் அடிப்படையில்தான், இனி அங்கு பணிகளைத் தொடர அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுவிட்டது. உயிரிழந்தவா்களில் பெங்களூரைச் சோ்ந்தவரும் உள்ளாா். அவரது குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. மேலும், தொழிலாளா்களின் இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் விவரங்களைச் சேகரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER