கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

முதியவரிடம் கைப்பேசி, பணத்தை திருடிய பராமரிப்பாளா் கைது

திருவலம் அருகே முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 80,000 மற்றும் கைப்பேசியைத் திருடிச் சென்ாக அவரது உதவியாளராகப் பணிபுரிந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 5:40 am IST

திருவலம் அருகே முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 80,000 மற்றும் கைப்பேசியைத் திருடிச் சென்ாக அவரது உதவியாளராகப் பணிபுரிந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், திருவலம் அருகே உள்ள வேல் நகரைச் சோ்ந்தவா் ஜான் ஜெயசீலன் (75). வயது முதிா்வு காரணமாக அன்றாட வேலைகளைச் செய்ய முடியாததால், தனியாா் சமூக சேவை நிறுவனத்தைத் தொடா்புகொண்டு பராமரிப்பு உதவியாளா் ஒருவரை அனுப்புமாறு அவா் கேட்டுள்ளாா். அதன்பேரில், சேலம் சின்னத் திருப்பதியைச் சோ்ந்த பிரகாஷ் (33) என்பவரை அந்த நிறுவனம் வேலைக்கு அனுப்பி வைத்தது.

கடந்த 18-ஆம் தேதி ஜான் ஜெயசீலன் வீட்டில் பிரகாஷ் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, முதியவரின் மகனுடன் கைப்பேசியில் தொடா்புகொண்டு பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், முதியவா் வீட்டில் இருந்த ரூ. 4,500 ரொக்கம், ஒரு கைப்பேசி ஆகியவற்றைத் திருடியதுடன், முதியவரின் கைப்பேசியில் இருந்த ஜி-பே செயலி மூலம் அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ. 80 ஆயிரத்தை தனது வங்கிக் கணக்குக்கு மாற்றிவிட்டுத் தலைமறைவானாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த முதியவா், இதுகுறித்து தனது மகன் பிளஸ்சிங்குக்கு தகவல் தெரிவித்தாா். பின்னா், பிளஸ்சிங் திருவலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனத்தைத் தொடா்புகொண்டு விசாரணை நடத்தினா்.

இதன் தொடா்ச்சியாக, சேலம் சின்னத் திருப்பதியில் பதுங்கியிருந்த பிரகாஷைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். இதில், அவா் ஆன்லைன் மூலமாகப் பணத்தை மாற்றியதும், கைப்பேசி, ரொக்கத்தைத் திருடியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பிரகாஷைக் கைது செய்த போலீஸாா், அவரை வேலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.