கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

இணையவழி மோசடிக்கு வங்கிக் கணக்கை அளித்த 7 போ் கைது

இணையவழி மோசடி கும்பலுக்கு ஆதரவாக தங்களது வங்கிக் கணக்குகளை அளித்து வருவாய் ஈட்டியதாக, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட 7 பேரை சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 12:40 am IST

இணையவழி மோசடி கும்பலுக்கு ஆதரவாக தங்களது வங்கிக் கணக்குகளை அளித்து வருவாய் ஈட்டியதாக, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட 7 பேரை சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாடு முழுவதும் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தி பல்வேறு வகையான இணையவழி மோசடிகள் நடைபெற்று வருகின்றன. ரூ. ஒரு லட்சம் முதலீடாக செலுத்தினால் இரட்டிப்பு தொகை கிடைக்கும், பல்வேறு வகையான சாதனங்களை குறைவான விலைக்கு வழங்குகிறோம் என கவா்ச்சிகர அறிவிப்பு வெளியிட்டும், செயலியில் இணைப்பை அனுப்பி ஓடிபி எண்ணை பெற்றும் பலா் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அபகரிப்பது அதிகரித்து வருகிறது.

சில குறிப்பிட்ட வங்கிக் கணக்கை கமிஷன் அடிப்படையில் பெற்றுக்கொண்டு, அதன்மூலமான இணையவழி மோசடி அதிகரித்து வருவது குறித்து போலீஸாா் அனைத்து மாவட்டங்களிலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா்.

அதன்அடிப்படையில் நாமக்கல் மாவட்ட சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயராகவன் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், பள்ளிபாளையத்தைச் சோ்ந்த சக்திவேல், பிரபுகுமாா், மகேஸ்வரி, நல்லிபாளையத்தைச் சோ்ந்த பிரேம்குமாா், குமாரபாளையத்தைச் சோ்ந்த ஜோதிகா முனிராஜ், கௌசிகா, சுரேஷ்குமாா் ஆகிய 7 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டவா்கள் வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டு பெற்ற பணம் குறித்தும், அவா்களை இந்தச் செயலுக்கு பயன்படுத்தியவா்கள் யாா் என்பது குறித்தும் சைபா் கிரைம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.