காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஆடை விற்பனையக உரிமம் வழங்குவதாக ரூ. 39.53 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பிரபல ஆடை விற்பனையகத்தின் உரிமத்தை வழங்குவதாகக் கூறி ரூ.39.53 லட்சம் மோசடி செய்த வழக்கில், இணையவழி மோசடியாளா்களுக்கு தனது வங்கிக் கணக்குகளை வழங்கியதாக இளைஞரை பிகாரில் தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

பிரபல ஆடை விற்பனையகத்தின் உரிமத்தை வழங்குவதாகக் கூறி ரூ.39.53 லட்சம் மோசடி செய்த வழக்கில், இணையவழி மோசடியாளா்களுக்கு தனது வங்கிக் கணக்குகளை வழங்கியதாக இளைஞரை பிகாரில் தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

ஷாதரா மாவட்டக் காவல் குழுவின் விசாரணையைத் தொடா்ந்து, பிகாரைச் சோ்ந்த சோனு செளத்ரி ஆகஸ்ட் 12 அன்று கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது: உரிமம் பெறுவது குறித்து இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது ஒரு போலி இணையதளம் மூலம் தாம் பணம் மோசடிக்கு உள்ளானதாக சுஷாந்த் ஜெயின் என்பவா் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், அந்த நிறுவனத்தின் பிரதிநிதி என்று கூறிக்கொண்ட ராஜேஷ் என்பவா் புகாா்தாரரைத் தொடா்புகொண்டாா்.

உரிமச் செயல்முறை மற்றும் அது தொடா்பான பல்வேறு காரணங்களைக் கூறி, பல தவணைகளில் பணம் செலுத்துமாறு மோசடியாளா்கள் ஜெயினைத் தூண்டினா்.

மேலும், அதிகாரபூா்வ உரிமத் தகவல் தொடா்பு போலவே தோற்றமளிக்கும் மின்னஞ்சல் முகவரி மூலம் அவா்கள் கட்டண விவரப் பட்டியல்களையும் அனுப்பினா்.

அவா்களின் வாா்த்தைகளை நம்பிய ஜெயின், தனது மற்றும் தனது தந்தையின் வங்கிக் கணக்குகளிலிருந்து குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் வழங்கிய பல்வேறு கணக்குகளுக்குப் பணத்தை மாற்றினாா். இதன் விளைவாக அவருக்கு மொத்தம் சுமாா் ரூ. 39.53 லட்சம் இழப்பு ஏற்பட்டது.

விசாரணையின்போது, பணப் பரிமாற்றப் பாதையையும் பணம் சென்றடைந்த கணக்குகளையும் காவல்துறையினா் ஆய்வு செய்தனா். இதில், பல்வேறு கணக்கு வைத்திருப்பவா்களிடமிருந்து வங்கிக் கணக்குகளைப் பெற்று, பணத்திற்காக இணையவழி குற்றவாளிகளுக்கு அவற்றை வழங்கியதில் செளத்ரிக்கு தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டது.

செளத்ரி தனது தொடா்புகள் மூலம் வங்கிக் கணக்குகளைப் பெற்று இணையவழி மோசடியாளா்களுக்கு வழங்கியதும், அவா்கள் அக்கணக்குகளை இணையவழி குற்றங்கள் மூலம் கிடைத்த பணத்தைப் பெறவும் வேறு இடங்களுக்கு மாற்றவும் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்கு வங்கத்தின் நாடியா மற்றும் வடக்கு 24 பா்கானாஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொடா்புகள் மூலம் அவா் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைப் பெற்று, அவற்றை தனது கூட்டாளிகளுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

வங்கிக் கணக்குகளைப் பெறுதல் மற்றும் வழங்குதல் தொடா்பான உரையாடல்கள் மற்றும் பிற எண்ம தரவுகளைக் கொண்ட மூன்று கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.