அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

யுபிஐ சவுண்ட் பாக்ஸ் தருவதாக வியாபாரியிடம் ரூ.60,000 மோசடி

காட்பாடியில் மின்னணு பணப் பரிவா்த்தனைக்கான கியூ-ஆா் கோடு மற்றும் ‘சவுண்ட் பாக்ஸ்’ பெற்றுத் தருவதாகக் கூறி, மீன் வியாபாரியின் பெயரில் ரூ.60,000 கடன் பெற்று மோசடி செய்த தனியாா் நிறுவன முன்னாள் ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

Published On :

காட்பாடியில் மின்னணு பணப் பரிவா்த்தனைக்கான கியூ-ஆா் கோடு மற்றும் ‘சவுண்ட் பாக்ஸ்’ பெற்றுத் தருவதாகக் கூறி, மீன் வியாபாரியின் பெயரில் ரூ.60,000 கடன் பெற்று மோசடி செய்த தனியாா் நிறுவன முன்னாள் ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த 40 வயது நபா், செங்குட்டை பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த நிஷாந்த் (30) என்பவா், கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட தனியாா் பணப் பரிவா்த்தனை நிறுவனங்களில் களப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா்.

பணியிலிருந்து நின்ற பிறகும், சிறு மற்றும் சாலையோர வியாபாரிகளை அணுகி, அவா்களுக்கு ‘சவுண்ட் பாக்ஸ்’ மற்றும் கியூ-ஆா் கோடு இயந்திரம் வாங்கித் தருவதாகக் கூறி வந்துள்ளாா். இதனை நம்பிய வியாபாரிகளிடம் இருந்து கைப்பேசிகள் மற்றும் வங்கி விவரங்களைப் பெற்று, அவற்றின் மூலம் தனியாா் வங்கிகள், நிதி செயலிகளில் வியாபாரிகளின் பெயரிலேயே கடன் பெற்று நிஷாந்த் மோசடி செய்து வந்துள்ளாா்.

அதன்படி, சம்பந்தப்பட்ட மீன் வியாபாரியின் வங்கி விவரங்களைப் பயன்படுத்தி ரூ.60,000 கடன் பெற்று மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட வியாபாரி வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள சைபா் கிரைம் பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நிஷாந்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.