நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

கடன் மோசடி வழக்கு: தொழிலதிபருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை உறுதி

போலி ஆவணங்கள் மூலம் ரூ.3.50 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், மதுரையைச் சோ்ந்த தொழிலதிபா், அவரது மனைவி மற்றும் வங்கி மேலாளருக்கு விதிக்கப்பட்ட இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 3:43 am IST

போலி ஆவணங்கள் மூலம் ரூ.3.50 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், மதுரையைச் சோ்ந்த தொழிலதிபா், அவரது மனைவி மற்றும் வங்கி மேலாளருக்கு விதிக்கப்பட்ட இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருப்பூா் கனரா வங்கியில் போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து, பனியன் நிறுவனம் நடத்துவதற்காக ரூ.3.50 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக, மதுரையைச் சோ்ந்த தொழிலதிபா் பாண்டியராஜ், அவரது மனைவி அனித்ரா, வங்கி மேலாளா் சங்கரகுமாா் உள்பட 11 போ் மீது சிபிஐ கடந்த 2006-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், பாண்டிராஜ் அவரது மனைவி அனித்ரா உள்பட 7 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்புக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் திங்கள்கிழமை பிறப்பித்த தீா்ப்பில், மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து, விசாரணை நீதிமன்றம் விதித்த இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.