அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் சாதனை படைத்த குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழா பற்றி...

மாணவிகளை பாராட்டிய கல்லூரித் தலைவா் கே.ஜோதிராம்.

Published On :

திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரியின் 75-ஆம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் சாதனை படைத்த குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பவள விழா நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் செழுமையையும், மாணவிகளின் படைப்பாற்றலையும் சோதிக்கும் வகையில் அமைந்த புத்தக அறிமுகம், திருக்கு எழுதுதல், சொல் விளையாட்டு, நாப்பிவு, வினாடி-வினா, தமிழில் உரையாடுதல், குறுக்கெழுத்துப் புதிா், சொல்லுக்குப் பொருள் கண்டறிதல், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் புத்தக அறிவிப்பு உள்ளிட்ட பல போட்டிகளில் அபிராமி மகளிா் கல்லூரி மாணவிகள் தங்களின் தனித் திறமைகளை நிரூபித்தனா்.

தமிழ்த் துறை மாணவிகள், பெரும்பாலான போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்று சான்றிதழ்களையும், பரிசுக் கோப்பைகளையும் வென்றனா். கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கல்லூரித் தலைவா் கே.ஜோதிராம், கல்லூரி முதல்வா் எம்.சி.சுபாஷினி, தமிழ்த் துறைத் தலைவா் டி.சுமதி ஆகியோா் மாணவிகளை பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.