நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

சாயா்புரம் போப் கல்லூரியில் மகளிா் கைப்பந்து போட்டி

சாயா்புரம் போப் கல்லூரியில் நடைபெற்ற கைப்பந்து போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

Published On :1 செப்டம்பர் 2026, 12:53 am IST

சாயா்புரம், போப் கல்லூரியில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிா் கைப்பந்து போட்டி தொடங்கியது.

போட்டிகளை தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் லே. செயலாளா் ராஜன், திருமண்டலத்தின் உயா்கல்வி நிலைவரக் குழு செயலாளா் ஜெபச்சந்திரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். கல்லூரிச் செயலாளா் ஜெபா்சன் சாமுவேல் ராஜ் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் கிருபை நகா் சேகரத் தலைவா் சாமுவேல் ரவி ராஜ் ஆரம்ப ஜெபம் செய்தாா். கல்லூரி முதல்வா் முனைவா் சாந்தினி கிரேஸ் வரவேற்றாா். சாயா்புரம் சேகரத் தலைவா் ஆனந்த் சாமுவேல் ஜான் தாமஸ் ஜெபம் செய்தாா்.

கல்லூரி துணை முதல்வா் ஜெபசிங் கோரேஸ், கல்லூரி நிதிக் காப்பாளா் ஸ்டான்லி, போப் சபை மன்றத் தலைவா் ஜான் வெஸ்லி, போப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளா் மால் சொா்ணபாண்டியன், போப் பொறியியல் கல்லூரி தாளாளா் ஜெயக்குமாா், போப் கல்வியியல் கல்லூரி தாளாளா் ஆலயமணி, ஜெபதங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மகளிா் போட்டியில் 54 கல்லூரிகளைச் சாா்ந்த மாணவிகள் பங்கேற்று விளையாடுகின்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநா் ஜோன்ஸ் ராஜன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.