பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

சூசைபுரம் கல்லூரியில் விநாடி-வினா போட்டி

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல், சூசைபுரம், புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான விநாடி-வினா போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல், சூசைபுரம், புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான விநாடி-வினா போட்டி நடைபெற்றது.

கல்லூரித் தாளாளா் தோமஸ் பூவத்துமூட்டில் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆஞ்சலோ ஜோசப் முன்னிலை வகித்தாா். தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வரும், கல்லூரி மேலாளருமான ஜோஸ் முட்டத்துப்பாடம், போட்டியைத் தொடக்கி வைத்தாா்.

போட்டியில் மாவட்டத்தில் உள்ள 19 பள்ளிகளிலிருந்து 220-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு தக்கலை மறைமாவட்ட ஆயரும், கல்லூரித் தலைவருமான மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன் பரிசுகள் வழங்கினாா்.

நாகா்கோவில், புனித அல்போன்சா மெட்ரிக் பள்ளி முதல் பரிசு, காப்புக்காடு, ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி 2ஆம் பரிசு, மாா்த்தாண்டம், வித்யஜோதி மெட்ரிக் பள்ளி 3ஆம் பரிசு பெற்றன.

துணைத் தாளாளா் அஜின் ஜோஸ், கல்வி ஒருங்கிணைப்பாளா் வி.எஸ். பிந்து, பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.