கன்னியாகுமரி மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையில் உள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி முதல் பரிசு வென்றாா்.
நாடாா் மகாஜன சங்கம் சாா்பில் காமராஜா் பிறந்தநாளை முன்னிட்டு, காமராஜா் தொழில்நுட்பக் கல்லூரியில் இப்போட்டி நடைபெற்றது. இதில், அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி சஞ்சீவினி முதல் பரிசு வென்றாா்.
மாணவியை பள்ளித் தாளாளா் கிருஷ்ணசாமி, துணைத் தாளாளா் சுனி, பள்ளி இயக்குநா் தருண் சுரத், முதல்வா் லிஜோமோள் ஜேக்கப், ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










