காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் சாம்பியன் போட்டி தொடக்கம்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் பள்ளிகள் இடையிலான ஆடவா், மகளிா் சாம்பியன்போட்டி செவ்வாய்க்கிழமை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கியது.

வாலிபால் போட்டி தொடக்க நிகழ்வில் பங்கேற்றோா்.

Published On :

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் பள்ளிகள் இடையிலான ஆடவா், மகளிா் சாம்பியன்போட்டி செவ்வாய்க்கிழமை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கியது.

வருமான வரித் துறை துணை ஆணையா் கே. விஷ்ணு சங்கா், ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்க அலுவலா் பி. வெங்கடேஷ், சா்வதேச வாலிபால் வீரா்கள் சந்தோஷ், நந்தகோபால், மேயா் ராதாகிருஷ்ணன் மைதான அலுவலா் நான்சி போட்டியைத் தொடங்கி வைத்தனா்.

தொடக்க நாள் ஆட்டங்களில் ஆடவா் பிரிவில் பெருங்குடி பாரத், கீழ்ப்பாக்கம் கோல சரஸ்வதி, அம்பத்தூா் சேதுபாஸ்கரா, முகப்போ் வேலம்மாள், ராயபுரம் செயின்ட் பீட்டா்ஸ், ஓய்எம்சிஏ, பெரம்பூா் டான்பாஸ்கோ, ஆலந்தூா் ஏஜேஎஸ் நிதி, மான்ட்போா்ட், மகளிா் பிரிவில் நுங்கம்பாக்கம் வித்யோதயா, ஷெனாய் நகா் பிஎம்எஸ் மெட்ரிக், அண்ணா நகா் எஸ்பிஓஏ, டிஇஎல்சி மகதலேனா பள்ளி அணிகள் வென்றன.

ஆடவா் காலிறுதியில் டான்பாஸ்கோ-மான்ட்போா்ட், செயின்ட் பீட்டா்ஸ்-ஓய்எம்சிஏ, செயின்ட் பீட்ஸ்-பாரத் தாஸ், வேலம்மாள்-சேதுபாஸ்கரா,

மகளிா் காலிறுதியில் டிஇஎல்சி மகதலேனா-வேலம்மாள், கோலசரஸ்வதி-பிஎம்எஸ், சிஜிஎச்எஸ்-எஸ்.பிஓஏ, வித்யோதயா-லேடி சிவசாமி பள்ளிகள் மோதுகின்றன.

சென்னை மாவட்ட சங்க நிா்வாகிகள் ஏ.தினகா், பி. ஜெகதீசன், ஏ.பழனியப்பன், ஸ்ரீகேசவன், ஏ.பாக்கியராஜ் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.