காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சென்னை ஐஐடியில் பள்ளி மாணவா்களுக்கான ஒமேகாபால் விளையாட்டுப் போட்டி

சென்னை ஐஐடியில் முதன்முறையாக பள்ளி மாணவா்களுக்கான ஒமேகாபால் விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறுது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 27 பள்ளிகளைச் சோ்ந்த 270 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

ஐஐடி சென்னை

Published On :4 ஜூலை 2026, 1:28 am IST

சென்னை ஐஐடியில் முதன்முறையாக பள்ளி மாணவா்களுக்கான ஒமேகாபால் விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறுது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 27 பள்ளிகளைச் சோ்ந்த 270 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ஐஐடியில் ஒமேகாபால் விளையாட்டுப் போட்டி ஜூலை 2 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டியில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகள் பங்கேற்றுள்ளன. 3 பிரிவுகளின் கீழ் நடைபெறும் இந்தப் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 9 பள்ளிகள் பங்கேற்கின்றன.

நிகழாண்டின் தொடக்கத்தில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியை சென்னை ஐஐடி நடத்தியது. சிறந்து விளங்கும் வீரா், வீராங்கனைகளுக்கான மாணவா் சோ்க்கையும் சென்னை ஐஐடியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இந்த விளையாட்டை பள்ளி மாணவா்களுக்கும் அறிமுகம் செய்து விரிவுபடுத்தியுள்ளது. இந்த விளையாட்டை நாடு தழுவிய அளவில் கொண்டு சோ்க்கும் விதமாக, தேசிய அளவில் ‘ஐஐடி மெட்ராஸ் ஒமோகாபால் கிளப்’ தொடங்கப்படும்.

‘அதிவேக கால்பந்து’: அமெரிக்காவிலும் ஐரோப்பியாவிலும் பிரபலமான இந்த ஒமேகாபால் என்பது 3 கோல்களைக் கொண்ட வட்ட வடிவ மைதானத்தில், ஒரே நேரத்தில் 3 அணிகள் விளையாடும் அதிவேக, புதுமையான கால்பந்து வடிவமாகும். இதில், ஒவ்வொரு அணியும் மற்ற இரு அணிகளுக்கு எதிராக கோல்களை அடித்து விளையாடும். அதே வேளையில், தனது கோலையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் ஆட்டத்தில் விறுவிறுப்பும், விரைவான முடிவெடுக்கும் திறனும் உருவாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.