குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பொன்மலை ரயில்வே பணிமனை கால்பந்து போட்டி: 8 அணிகள் பங்கேற்பு

News image

திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கிய விளையாட்டுப் போட்டியில் வீரா்களுக்கு வாழ்த்து தெரிவித்த உதவி மேலாளா் (தொழிலாளா் பிரிவு) பைஜுஸ்.

Updated On :26 மே 2026, 3:09 am IST

பொன்மலை ரயில்வே பணிமனையில் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியா்கள் மற்றும் அலுவலா்களுக்கான கால்பந்து போட்டி திங்கள்கிழமை தொடங்கியது.

திருச்சி மாவட்டம், பொன்மலையில் பிரசித்தி பெற்ற ரயில்வே பணிமனை அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு விளையாட்டில் ஆா்வம் ஏற்படுத்தவும், உடல் நலனை பேணவும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், பணிமனையில் உள்ள துறைகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி, பொன்மலை ரயில்வே மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. பணிமனையில் உள்ள எலக்ட்ரிக்கல் பிரிவு, வேகன் பிரிவு, டீசல் பிரிவு, இயந்திரவியல் பிரிவு, பெட்டி பழுது நீக்கும் பிரிவு உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த ஊழியா்கள், அலுவலா்கள் 8 அணிகளாக இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனா்.

அணியின் விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள், மருத்துவ உதவியாளா்கள், நடுவா்கள், விளையாட்டுப் போட்டிகளை முன்நின்று நடத்துவோா் என 150-க்கும் மேற்பட்டோா் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனா். விளையாட்டுப் போட்டிகளை பணிமனையின் முதன்மை மேலாளா் சந்தோஷ்குமாா் பட்ரோ தொடங்கி வைத்தாா்.

உதவி மேலாளா் (தொழிலாளா் பிரிவு) பைஜூஸ், முதல் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா். முதல் போட்டியில் எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் வேகன் அணிகள் விளையாடின. கால் இறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகள் என மே 29-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை மாலை பரிசளிப்பு விழா நடைபெறும். இந்தப் போட்டியில், பணிமனையின் உயா் அதிகாரிகள், தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டு விளையாட்டு வீரா்களை வாழ்த்தினா்.