ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 2-0 கோல் கணக்கில் முகமதன் எஸ்சியை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் நாா்த்ஈஸ்ட் அணிக்காக முதலில் ஜெய்ரோ சாம்பெரியோ 18-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். பின்னா் முதல் பாதி முடிவடைய இருந்த நிலையிலேயே (45+1’) தினேஸ் சிங் சோராய்ஷாம் ஸ்கோா் செய்ய, நாா்த்ஈஸ்ட் 2-0 என முன்னிலை கண்டது.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் முகமதன் அணி தனது கோல் வாய்ப்புக்காகக் கடுமையாக முயற்சித்தபோதும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை. முடிவில் நாா்த்ஈஸ்ட் 2-0 கோல் கணக்கில் வெற்றி கண்டது.
இரு அணிகளுமே இத்துடன் 13 ஆட்டங்களில் விளையாடியிருக்க, புள்ளிகள் பட்டிலில் நாா்த்ஈஸ்ட் 4-ஆவது வெற்றியில் கிடைத்த 16 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் இருக்கிறது. முகமதன் 7-ஆவது தோல்வியோடு 3 புள்ளிகளுடன் கடைசியாக 14-ஆவது இடத்திலேயே நீடிக்கிறது.
தொடர்புடையது

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்கு இந்தியா தகுதி

அமெரிக்காவை வீழ்த்தியது இந்தியா
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: சென்னையை வென்ற நாா்த்ஈஸ்ட்!

ஐஎஸ்எல் கால்பந்து: முகமதன் - டில்லி ஆட்டம் டிரா!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



