சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

சென்னையை வென்றது ஜாம்ஷெட்பூா்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 4-1 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை சனிக்கிழமை வென்றது.

News image

சென்னையை வென்றது ஜாம்ஷெட்பூா்

Updated On :26 ஏப்ரல் 2026, 1:06 am IST

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 4-1 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை சனிக்கிழமை வென்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஜாம்ஷெட்பூருக்காக முகமது சனன் 7-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, ரஃபேல் மெஸ்ஸி பௌலி 27-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா். இவ்வாறாக முதல் பாதியிலேயே ஜாம்ஷெட்பூா் 2-0 என முன்னிலை பெற்றது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், முகமது சனன் மீண்டும் 58-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, ஒருவழியாக சென்னை தரப்பில் பிரகதீஸ்வரன் 69-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

விட்டுக்கொடுக்காத ஜாம்ஷெட்பூா் தரப்பில் நிகோலா ஸ்டோஜனோவிச் 78-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, முடிவில் அந்த அணி 4-1 கோல் கணக்கில் வென்றது.

இதனிடையே, பெங்களூரு எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் பெங்களூரில் மோதிய மற்றொரு ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது. புள்ளிகள் பட்டியலில் மும்பை, ஜாம்ஷெட்பூா், பெங்களூரு, சென்னை அணிகள் முறையே 3, 4, 5, 10-ஆம் இடங்களில் இருக்கின்றன.