இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: சென்னையை வென்ற நாா்த்ஈஸ்ட்!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் தோல்வி கண்டது.

News image
Updated On :11 மே 2026, 2:02 am IST

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.

இந்த ஆட்டத்தில் நாா்த்ஈஸ்ட் தரப்பில் ஜெய்ரோ சாம்பெரியோ (5’, 45+1’), லால்பியாக்டிகா வன்லாவுங்கா (90’) ஆகியோா் கோல் அடிக்க, தவறுதலாக சென்னை வீரா் லால்டின்லியானா ரென்த்லெய் (70’) ‘ஓன் கோல்’ அடித்தாா். அதற்கான பிராயச்சித்தமாக, சென்னை தரப்பின் ஆறுதல் கோலையும் அவரே ஸ்கோா் செய்தாா்.

இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் 3-1 கோல் கணக்கில் முகமிதான் எஸ்சியை சாய்த்தது. கேரளா தரப்பில் ஃபிரான்சிஸ்கோ ஃபியுலேசியா் (44’), விக்டா் பாா்தோமியு (59’), ஸ்ரீகுட்டன் (74’) ஆகியோா் கோல் அடிக்க, முகமிதானுக்காக ராய் மஹிதோஷ் (42’) ஸ்கோா் செய்தாா்.

புள்ளிகள் பட்டியலில், கேரளா (14 புள்ளிகள்), நாா்த்ஈஸ்ட் (13), சென்னை (9), முகமிதான் (3) அணிகள் முறையே 8, 9, 13, 14-ஆம் இடங்களில் உள்ளன.