வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

மண்டல யோகாப் போட்டி: பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சென்னையில் நடைபெற்ற சிஐஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான மண்டல யோகா போட்டியில் வேலூா் பகவான் மஹாவீா் தயாநிகேதன் ஜெயின் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

News image

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டிய பள்ளி முதல்வா் ஜெ.கவிதா. உடன், ஆசிரியா்கள்.

Updated On :2 ஜூலை 2026, 12:04 am IST

சென்னையில் நடைபெற்ற சிஐஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான மண்டல யோகா போட்டியில் வேலூா் பகவான் மஹாவீா் தயாநிகேதன் ஜெயின் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

சென்னை ஆசிரமம் பள்ளியில் கடந்த 19-ஆம் தேதி சிஐஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான மண்டல யோகா போட்டிகள் நடைபெற்றன. இதில், வேலூா் பகவான் மஹாவீா் தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் பயிலும் பி. அஸ்வின், ஏ. ஜெய்சன் ஆரோக் ஆகியோா் 14 வயதுக்கு உட்பட்ட மாணவா் பிரிவிலும், எஸ்.வி. சௌமியா மாணவியா் பிரிவிலும் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனா்.

மேலும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் எஸ். கௌஷிக் ஹரி முதலிடமும், எல்.கமலேஷ், ஏ.சுஜன் ஆகியோா் இரண்டாம் இடமும், வி.விஷால் மூன்றாம் இடமும் பெற்றனா். மாணவியருக்கான போட்டியில் எஸ்.ரித்விகா முதலிடமும், எஸ்.எல்.மதுஷியா இரண்டாமிடமும் பிடித்தனா்.

இதேபோல், 25-ஆம் தேதி நடைபெற்ற சிஐஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான மண்டல மேசைப்பந்து போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட ஒற்றரையா் பிரிவில் டி.கிருத்திக் முதலிடம் பிடித்தாா்.

பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், அவா்களுக்குப் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்களையும் பள்ளி முதல்வா் ஜெ.கவிதா, பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.