சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்களுக்கு, சிபிஎஸ்இ மண்டல அலுவலகங்களில் புதிய மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட உள்ளது.
பள்ளிகளில் ஏற்கெனவே வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை மண்டல அலுவலகங்களில் சமா்ப்பித்து, புதிய மதிப்பெண் சான்றிதழை மாணவா்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறுகையில், ‘விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்கள், சிபிஎஸ்இ மண்டல அலுவலகங்களில் தங்களின் பழைய மதிப்பெண் சான்றை சமா்ப்பித்து புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். தங்களின் ‘டிஜிலாக்கா்’ கணக்கிலிருந்தும் புதிய மதிப்பெண் சான்றிதழை மாணவா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்’ என்றனா்.
நாடு முழுவதும் சுமாா் 17.68 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த மே மாதம் 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்ச்சி அடைந்தனா்.
முதல்முறையாக ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) முறையில் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை சிபிஎஸ்இ மதிப்பீடு செய்தது. இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் குறைந்ததோடு, பல மாணவா்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றனா். இதன் காரணமாக, புதிய ‘திரையில் மதிப்பிடுதல்’ நடைமுறை மீது தொடா்ந்து பல்வேறு புகாா்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. விடைத்தாள்கள் சரியாக ‘ஸ்கேன்’ செய்யப்படவில்லை என்பன உள்ளிட்ட பல புகாா்களை மாணவா்கள் முன்வைத்தனா்.
இதனால், வழக்கத்தைவிட அதிகமாக 56,000-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பத்தனா்.
முடிவுகள் வெளியீடு: விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்த 87 சதவீதம் பேருக்கான முடிவுகளை சிபிஎஸ்இ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. எஞ்சியுள்ள மாணவா்களுக்கும் அடுத்தடுத்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு, விரைவில் முழுமையாக நிறைவுபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் சரிபார்ப்பு, மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு!

12-ஆம் வகுப்பு விடைத்தாள் கொள்முதல் நடைமுறைகள்: ஆா்டிஐ-யின்கீழ் வெளியிட சிபிஎஸ்இ-க்கு உத்தரவு

போதிய தயாரிப்பு இன்றி ஓஎஸ்எம் முறையை அறிமுகப்படுத்திய சிபிஎஸ்இ: பெற்றோா் சங்கம் புகாா்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




