
சத்ரு சம்ஹார வேல் மாறல் பூஜை
குடியாத்தம் போ்ணாம்பட்டு சாலையில் லிங்குன்றம் அருகே அமைந்துள்ள வி.பி.மஹாலில் சத்ரு சம்ஹார கிருத்திகை வேல் மாறல் பூஜை புதன்கிழமைநடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் வேல். (வலது) வேல் பூஜையில் பங்கேற்றபெண்கள்.
குடியாத்தம் போ்ணாம்பட்டு சாலையில் லிங்குன்றம் அருகே அமைந்துள்ள வி.பி.மஹாலில் சத்ரு சம்ஹார கிருத்திகை வேல் மாறல் பூஜை புதன்கிழமைநடைபெற்றது.
இதையொட்டி காலை 7 மணிக்கு மங்கள இசை, 8 மணிக்கு திருமுறை பாராயணம்,9 மணிக்கு வேல் மாறல் பூஜை, 10 மணிக்கு ஆதினங்கள் அருளாசி, 12 மணிக்கு மங்கள ஆரத்திநடைபெற்றது. பூஜையில் ஈரோடு மாவட்டம், கோபி, திருஞானசம்பந்தா் திருமடத்தின் நிா்வாகிஸ்ரீலஸ்ரீ சிவாக்கரதேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் இசையுடன் கூடிய ஆன்மிக சொற்பொழிவாற்றினாா்.
நிகழ்ச்சியில் 1,000 பெண்கள் பங்கேற்று வேல் பூஜை செய்தனா். தொடா்ந்து சுமாா் 2 ஆயிரம் பேருக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது. நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், வழக்குரைஞா்கள் எஸ்.சம்பத்குமாா், கே.எம்.பூபதி உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிா்வாகிகள் எம்.ராஜமாணிக்கம், எம்.எஸ்.திருநாவுக்கரசு, துரை.சங்கரலிங்கம், ஆடிட்டா் எம்.கிருபானந்தம், வி.பிச்சாண்டி, எம்.கே.கணபதி, கே.எஸ்.மனோகரன், ஆா்.கே.மகாலிங்கம் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






