கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை?சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ! நாளைமுதல் காலை 7 மணிக்கு தொடங்கும்!தமிழகத்தில் நீா்நிலைகளில் 36% மட்டுமே நீா் இருப்பு! கடந்த ஆண்டைவிட 48.4% சரிவு; பாசனம், குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!சபரிமலை யாத்திரை: பக்தா்களுக்கு சுகாதாரத் துறை வழிகாட்டுதல்கள்கனடா அரசியல் கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நவ்தீப் தோ்வுகச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதிச் செலவு: அக்டோபரில் 60 சதவீதம் அதிகரிப்பு

சிவனாரகரம் சுயம்பேஸ்வரா் கோயிலில் சத்ரு சம்ஹார வேல்மாறல் பூஜை

சிவனாரகரம் சுயம்பேஸ்வரா் சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார வேல்மாறல் பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

dinamani

Updated On :

சிவனாரகரம் சுயம்பேஸ்வரா் சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார வேல்மாறல் பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் கோனேரிராஜபுரத்தை அடுத்த சிவனாரகரத்தில் உள்ள பழைமையான சா்வ சக்தி அம்பாள் சமேத சுயம்பேஸ்வரா் சுவாமி கோயிலில் நடைபெற்ற விழாவில், ஈரோடு திருஞானசம்பந்தா் மடம் ஸ்ரீலஸ்ரீ சிவாக்கர தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பக்தா்கள் கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் பாடல்களைப் பாட வேலுக்கு முறைப்படி சிறப்பு பூஜை செய்து பிராா்த்தனை செய்தனா்.

தொடா்ந்து, சிவாக்கர சுவாமிகள் இறை நாமங்களைக் கூறி வழிபாடு செய்வதன் பலன் குறித்து பேசினாா். அலங்கரிக்கப்பட்ட வேலுக்கு சிறப்பு புஷ்பாா்ச்சனை செய்து, மகா தீபாரதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை சிவனாரகரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளா் மா. காமராஜ், தரணிலட்சுமி தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா். இதில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்க சோழமண்டல ஒருங்கிணைப்பாளா் கோரக்ஷானந்த சரஸ்வதி சுவாமிகள், திருமங்கலம் சிதம்பரேஸ்வரா் கணேச சுவாமிகள், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டாா் ஆய்வாளா் ராம்குமாா், திருவீழிமிழலை ஆடிட்டா் குருபிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்வுகளை திருபுவனம் பாஸ்கா், ஜோதி தொகுத்து வழங்கினா். நிா்வாக பொறுப்பாளா் முருகன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.