ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அறிவியல் ஆராய்ச்சிக்கு ரூ. 1,200 கோடி நிதி ஒதுக்கீடு

கோவை, ஜன. 8: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் அறிவியல் ஆராய்ச்சிக்கு நடப்பு ஆண்டில் ரூ. 1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையிடம் இருந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கோவை, ஜன. 8: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் அறிவியல் ஆராய்ச்சிக்கு நடப்பு ஆண்டில் ரூ. 1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையிடம் இருந்து ஆராய்ச்ஹசிகளுக்கு நிதியுதவி பெறுவது பற்றிய திட்ட மதிப்பீட்டுக் கூட்டம், காருண்யா பல்கலைக் கழகத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை விஞ்ஞானி ஜி.ஜே. சமாதானம் பேசியது:

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. குடும்பநலம், விவசாயம், மற்றும் சமுதாய நோக்குடன் செய்யப்படும் ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளின் அறிவியல் ரூ. 1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 35 வயதுக்கு மேற்பட்ட இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு ரூ. 30 லட்சம் வரையும், பிஎச்டி ஆய்வுக்கு ரூ. 20 லட்சம் வரையும் நிதி பெறும் வசதி உள்ளது. ஆராய்சிக்கு நிதி தேவைப்படுவோர் அது குறித்த முழு விவரங்களுடன்  விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு நிதி வழங்குவது தொடர்பாக தனிக்குழு நேரில் சென்று ஆய்வு செய்யும். அந்தக் குழுவினர் ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை ஆய்வு செய்து நிதி வழங்குவது தொடர்பாக பரிந்துரை செய்வர். பின்னர் அறிவியல் தொழில்நுட்பத்துறை சார்பில் நிதி வழங்கப்படும்.

நாட்டின் எதிர்கால அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில், அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இன்ஸ்பையர் விருதுடன் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும்  6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் வரை நிதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,என்றார்.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை உறுப்பினர் செயலர் எஸ். வின்சென்ட், திட்டம் குறித்து விளக்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் பால்அப்பாசாமி தலைமைவகித்தார். பேராசிரியர் ஆன்டனி பாலன் நன்றி கூறினார். முன்னதாக பல்கலைக்கழக நீரியல் மைய இயக்குநர் ஜேம்ஸ் வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.