ஈரோட்டில் இன்று தாமரை ரத யாத்திரை

ஈரோடு, ஜன. 8: பாஜக சார்பில் தாமரை ரத யாத்திரை நிகழ்ச்சி ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) நடைபெற உள்ளது.   இது தொடர்பாக மாநில பிரசார அணித் தலைவர் ஆ.சரவணன் கூறியது:   சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்குவ
Updated on
1 min read

ஈரோடு, ஜன. 8: பாஜக சார்பில் தாமரை ரத யாத்திரை நிகழ்ச்சி ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) நடைபெற உள்ளது.

  இது தொடர்பாக மாநில பிரசார அணித் தலைவர் ஆ.சரவணன் கூறியது:

  சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்குவதுபோல், இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.

  ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ரத யாத்திரை நடைபெறுகிறது.  சத்தியமங்கலத்தில் தொடங்கும் இந்த யாத்திரை, மாலை 3 மணிக்கு ஈரோடு வருகிறது.  வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயில் அருகில், பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்துப் பேசுகிறார்.

  தொடர்ந்து அரச்சலூர், கந்தசாமிபாளையம், சிவகிரி, மொடக்குறிச்சி, லக்காபுரம் பகுதிகளில் யாத்திரை நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com