மணல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

பவானி, ஜன. 8: இயந்திரம் மூலம் மணல் அள்ளுவதை அனுமதிக்க வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் பவானியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.   தமிழகம் முழுவதும் ஆறுகளில் உள்ள மணல் குவாரிகளில் பொக்லைன் இயந்தி
Updated on
1 min read

பவானி, ஜன. 8: இயந்திரம் மூலம் மணல் அள்ளுவதை அனுமதிக்க வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் பவானியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  தமிழகம் முழுவதும் ஆறுகளில் உள்ள மணல் குவாரிகளில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதற்கும், லாரிகளில் ஏற்றுவதற்கும் அரசு தடை விதித்துள்ளது.

  இதனால், பெரும் காலதாமதம் ஏற்றபடும். எனவே, இயந்திரம் மூலம் மணல் அள்ளுவதை மீண்டும் அனுமதிக்க வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பிரகாஷ்ராஜ், பவானி நகர்மன்றத் தலைவர் துரை தலைமையில், பவானியில் லாரி உரிமையாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  பவானி-அந்தியூர் ரோடு பண்டாரப்பிச்சி கோயில் எதிரில் தங்களது லாரிகளை நிறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com