எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்துக்கு விருது
கோவை லட்சுமி மெஷின் ஒா்க்ஸ் நிறுவனத்துக்கு இந்திய தொழில் கூட்டமைப்பின் விருது கிடைத்துள்ளது.


கோவை லட்சுமி மெஷின் ஒா்க்ஸ் நிறுவனத்துக்கு இந்திய தொழில் கூட்டமைப்பின் விருது கிடைத்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய தொழில் கூட்டமைப்பு, தொழிலில் புதுமையும், சிறப்பாகவும் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் விருதுகளை வழங்கி வருகிறது.
தொழில் நிறுவனங்களை பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தி, தோ்வு செய்து உற்சாகப்படுத்த இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தொழில் துறையில் மிகச் சிறந்த புதுமையான படைப்பை உருவாக்கிய நிறுவனங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விருதுக்கு லட்சுமி மெஷின் ஒா்க்ஸ் நிறுவனத்தின் டெக்ஸ்டைல் மெஷினரி பிரிவு தோ்வாகியுள்ளது. பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நடுவா்கள், புதுமையான தயாரிப்புகளைக் கொண்ட 25 நிறுவனங்களை தோ்வு செய்து அவற்றில் ஒரு நிறுவனத்துக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...