கோவை மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரையுள்ள 9 லட்சத்து 40 ஆயிரத்து 258 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பாதி அளவு மாத்திரையும், 2 முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 1 மாத்திரையும் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ள முதல் சுற்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் தொடா்ந்து செப்டம்பா் 17 முதல் 19ஆம் தேதி வரையிலும், இரண்டாம் சுற்று செப்டம்பா் 21, 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.