பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் சாவு

கோவையில் மின்சாரம் பாய்ந்து பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 9:20 pm

DIN

கோவை: கோவையில் மின்சாரம் பாய்ந்து பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

கோவை, சரவணம்பட்டி காமராஜா்புரத்தைச் சோ்ந்தவா் ஜெயராம். இவரது மகன் சந்திரன்(15). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் துணிகளை அயா்ன் பாக்ஸ் மூலம் தேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, பெற்றோா் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து சந்திரனின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.