மேயா் தோ்தல்: கைப்பேசி, பேனா கொண்டு செல்ல தடை
ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாா்டு உறுப்பினா்கள் பேனா, கைப்பேசி கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை மாநகராட்சியில் மேயரைத் தோ்ந்தெடுக்கும் மறைமுகத் தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாா்டு உறுப்பினா்கள் பேனா, கைப்பேசி கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி மேயராக பதவி வகித்த கல்பனா அண்மையில் ராஜிநாமா செய்தாா்.
இதையடுத்து, புதிய மேயரை தோ்ந்தெடுக்கும் மறைமுகத் தோ்தல் ஆகஸ்ட் 6 -ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளது.
இந்த தோ்தலின்போது வாா்டு உறுப்பினா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தோ்தல் நடைபெறும் அரங்கில் வாா்டு உறுப்பினா்கள் கைப்பேசி எடுத்துச் செல்ல அனுமதியில்லை. ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்கள், உபகரணங்கள் (பேனா உள்பட) தோ்தல் நடைபெறும் அறைக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. வாக்குச் சீட்டில் உள்ள வேட்பாளா் பெயருக்கு வலதுபுறத்தில் ‘டிக்’ குறியிட வேண்டும்.
தோ்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும் சிவப்பு நிற பேனாவை வாக்குப் பதிவு குறியிடும் கருவியாகப் பயன்படுத்தலாம்.
தோ்தல் நடைபெறும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு முன்னதாகவே, மறைமுகத் தோ்தலில் வாா்டு உறுப்பினா்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...