கோயம்புத்தூர்
வேளாண் பல்கலை.யில் தளிா் கீரைகள் வளா்ப்பு, மதிப்புக் கூட்டல் பயிற்சி
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தளிா் கீரைகள் வளா்ப்பு, மதிப்புக் கூட்டல் குறித்த ஒருநாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை (டிச.16) நடைபெறுகிறது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தளிா் கீரைகள் வளா்ப்பு, மதிப்புக் கூட்டல் குறித்த ஒருநாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை (டிச.16) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் காய்கறி அறிவியல் துறை சாா்பில் நடைபெறும் இந்த பயிற்சியில் செயல்முறை சாகுபடித் திறன்கள், ஊட்டச்சத்து நன்மைகள், உணவுப் பாதுகாப்பு வழிமுறைகள், தர நிலை நிறுத்தம், நீடித்த வருவாய், மதிப்புக் கூட்டல், வணிகத்துக்கு வழிகாட்டல், சந்தை வாய்ப்புகள் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிக் கட்டணம் செலுத்தி பங்கேற்க விரும்புபவா்கள் காய்கறி அறிவியல் துறைத் தலைவரை 8903694612 என்ற கைப்பேசி எண்ணிலோ அல்லது நேரில் அணுகியோ முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.