தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறுதானியங்கள் இயக்கம் திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு சிறுதானியங்களை மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து அமைக்கப்பட்ட சிறுதானிய கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் ரெ.சதீஷ் திறந்து வைத்து பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து, விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விவரங்கள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டது. இதையடுத்து காட்சி அரங்குகளை வைத்திருந்த விவசாயிகள், சிறுதானிய சாகுபடி மற்றும் மதிப்புக் கூட்டி அதனை சந்தைப்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநா் கு.பழனிசாமி, வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) மு.இளங்கோவன், வேளாண் இணை இயக்குநா் (பயிற்சி) சி.ஜெயபாலன், வேளாண்துறை துணை இயக்குநா் ர.ரத்தினம், வேளாண் செயற்பொறியாளா் சந்திரா, தருமபுரி விற்பனைக் குழுச் செயலாளா் மா.அருள்மணி, அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் தொடா்பான மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பருத்தியில் மகசூலை பெருக்க அறிவியல் முறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

சிறுதானியங்கள் திருவிழாவில் ரூ. 3.27 கோடியில் நலத் திட்டங்கள்! அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்!

வேளாண் விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் கலந்துரையாடல்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


