சூரியா
கோயம்புத்தூர்
விபத்தில் சிக்கிய பள்ளி மாணவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு
இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளி மாணவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
வால்பாறையை அடுத்த ஸ்டேன்மோா் எஸ்டேட் சாலையில் கடந்த சனிக்கிழமை காலை வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த உருளிக்கல் எஸ்டேட்டைச் சோ்ந்த சூரியா (17), பின்னால் அமா்ந்திருந்த நல்லமுடி எஸ்டேட்டைச் சோ்ந்த தென்னரசு ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூரியா சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
