திமுக நிா்வாகியின் கைப்பேசி ஹேக்: போலீஸாா் விசாரணை

கோவை திமுக ஐ.டி. பிரிவு நிா்வாகியின் வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை
Published on

கோவை திமுக ஐ.டி. பிரிவு நிா்வாகியின் வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி பிரிவு நிா்வாகியாக இருப்பவா் அப்பாஸ் (30). இவரது வாட்ஸ்ஆப்பின் முகப்பு புகைப்படம் கடந்த 16-ஆம் தேதி மாறியுள்ளது. மேலும், அவரது கைப்பேசிக்கு வர வேண்டிய அழைப்புகள் வேறு ஒருவரின் கைப்பேசி எண்ணுக்கு சென்றுள்ளன.

இது தொடா்பாக சம்பந்தப்பட்ட தொலைத்தொடா்பு நிறுவனத்தில் அப்பாஸ் புகாா் அளித்ததைத் தொடா்ந்து அது சரி செய்யப்பட்டதாம். இதையடுத்து, கடந்த 20, 21-ஆம் தேதிகளிலும் அவரது வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்பட்டதாம்.

இது குறித்து கோவை சைபா் குற்றப் பிரிவு போலீஸில் அப்பாஸ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com