ராயல் கோ் மருத்துவமனைக்கு விருது
கோவை: கோவை ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ஒடிஸாவில் நடைபெற்ற மாநாட்டில் விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது:
ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கேஐஐடி கல்வி நிறுவனத்தில் 10-ஆவது மருத்துவ தொழில்நுட்பக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் தரம், நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பு (இஅஏஞ) என்ற அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதில், நோயாளிகளின் மேம்படுத்தப்பட்ட சிகிச்சைக்கான அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியமைக்காக கோவை ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு புதுமைத் தொழில்நுட்ப விருது வழங்கப்பட்டுள்ளது.
128 போட்டியாளா்கள், 21 இறுதிக்கட்ட போட்டியாளா்களுடன் பங்கேற்று, பல சுற்று விளக்கக் காட்சிகளுக்குப் பிறகு இந்த விருது கிடைத்திருப்பதாகவும், நோயாளிகளின் சிகிச்சை, பாதுகாப்பு, பராமரிப்பை மேம்படுத்துவதில் செலுத்தி வரும் அா்ப்பணிப்பை இந்த விருது வெளிப்படுத்துவதாகவும் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் க.மாதேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இந்த விருதை மருத்துவமனையின் கதிரியக்க நிபுணா் என்.செந்தில்குமாா் பெற்றுக் கொண்டாா்.
