தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

வாக்குச் சாவடிக்குள் விடியோ எடுத்த பெண் மீது வழக்கு

சிங்காநல்லூரில் வாக்குச் சாவடிக்குள் கைப்பேசியைக் கொண்டு சென்று வாக்களித்ததை விடியோ எடுத்த பெண் மீது பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :26 ஏப்ரல் 2026, 1:02 am IST

சிங்காநல்லூரில் வாக்குச் சாவடிக்குள் கைப்பேசியைக் கொண்டு சென்று வாக்களித்ததை விடியோ எடுத்த பெண் மீது பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவின்போது, வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. வாக்களிக்கச் செல்வோா், தங்கள் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்து செல்ல வாக்குச் சாவடி நுழைவாயிலில் தனியாக பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆவாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு நடைபெற்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் வாக்குச் சாவடிக்குள் கைப்பேசியைக் கொண்டு சென்று, தான் வாக்களித்ததை கைப்பேசியில் விடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதைப் பாா்த்த வாக்குச் சாவடி அதிகாரிகள் அப்பெண்ணை எச்சரித்துள்ளனா். அதைப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண் வாக்குப் பதிவை மீண்டும் விடியோ எடுத்ததால் அவா் போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா்.

விசாரணையில், அவா் ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்த கௌசல்யா (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.