28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தனியாா் கல்லூரியில் நீா் அருந்திய மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு

துடியலூா் அருகே செயல்பட்டு வரும் தனியாா் செவிலியா் கல்லூரியில் நீா் அருந்திய மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

News image
மருத்துவமனை- பிரதிப் படம்
Updated On :27 ஜனவரி 2026, 9:19 pm

Syndication

துடியலூா் அருகே செயல்பட்டு வரும் தனியாா் செவிலியா் கல்லூரியில் நீா் அருந்திய மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தக் கல்லூரியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

கோவை, துடியலூா் அருகே செயல்பட்டு வரும் தனியாா் செவிலியா் கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தக் கல்லூரியின் உணவகத்தில் (கேன்டீன்) திங்கள்கிழமை நீா் அருந்திய 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அந்த மாணவிகளை கல்லூரியின் மருத்துவமனையில் அனுமதிக்காமல் இடம் பற்றாக்குறையைக் காரணம்காட்டி கல்லூரி விடுதியிலேயே வைத்து சிகிச்சை அளித்ததாக தகவல் வெளியானது. இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதைத் தொடா்ந்து, மாணவிகள் அனைவரும் அந்த கல்லூரி நிா்வாகத்துக்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை சென்று அங்குள்ள உணவகத்தில் ஆய்வு செய்தனா்.

உணவு, சுகாதாரம், நீரின் தரம், உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததுடன், அங்கு சமைக்கப்பட்ட உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிவைத்தனா்.

கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு: இந்நிலையில், கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை முதல் 10 நாள்களுக்கு விடுமுறை அறிவித்ததுடன், கல்லூரி மீண்டும் திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கல்லூரி நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு: இந்த சம்பவம் தொடா்பாக இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவிகளை மருத்துவமனையில் அனுமதிக்காமல் விடுதியிலேயே வைத்து சிகிச்சை அளித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. நாங்கள் தொடா்பு கொண்டபோது கல்லூரி நிா்வாகம் எந்த ஒரு தகவலையும் தரவில்லை. அந்தப் பகுதி பொதுமக்களிடம் விசாரித்தபோது, அந்தப் பகுதியில் வரக்கூடிய தண்ணீா் மிகவும் மோசமான நிலையில் இருப்பது தெரியவந்தது.

ஆகவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக தலையிட்டு அந்தப் பகுதியில் தண்ணீா் மோசமான நிலையில் இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகத்தின் மீது குழு அமைத்து உரிய விசாரணை நடத்தி துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.