ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

நிலத்தை கையகப்படுத்திக் கொடுத்தால் விமான நிலைய விரிவாக்கப் பணி நடைபெறும்: அமைச்சர் அசோக் கணபதி ராஜு

மாநில அரசு நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுத்தால் கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கணபதி ராஜு தெரிவித்துள்ளார்.

Updated On :

மாநில அரசு நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுத்தால் கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கணபதி ராஜு தெரிவித்துள்ளார்.

 உதகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க கோவைக்கு விமானம் மூலமாக திங்கள்கிழமை வந்த அமைச்சரிடம், இந்திய தொழில் வர்த்தக சபை கோவைத் தலைவர் டி.நந்தகுமார் உள்ளிட்ட பிரமுகர்கள் விமான நிலைய விரிவாக்கம் குறித்து மனு அளித்தனர்.

 அதில், தமிழகத்தின் 2-ஆவது பெரிய நகரான கோவை, இந்தியாவில் வளர்ந்து வரும் 20 பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் ஒன்றாக உள்ளது. சுமார் 25 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு உள்ளனர். மருத்துவமனை, கல்விச் சேவையில் புகழ் பெற்றுள்ள கோவை, கேரளத்துக்கு நுழைவு வாயிலாக உள்ளது.

 ஆனால், கோவை விமான நிலையத்தில் இருந்து மலேசியா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேரடி விமானம் இல்லை. சிங்கப்பூர், சார்ஜாவுக்கு வாரத்துக்கு 3 முறை மட்டுமே நேரடி விமானம் இயக்கப்படுகிறது. ஏர் ஏஷியா, டைகர் ஏர்லைன்ஸ், ஃப்ளை துபை போன்ற நிறுவனங்கள் நேரடி விமானத்தை இயக்க முன்வந்தாலும் கோவைக்கு இருவழி விமானப் போக்குவரத்து உரிமம் வழங்கப்படாததால் அது சாத்தியப்படவில்லை.

 எனவே, இதற்கான ஒப்பந்தங்களை விரைந்து மேற்கொள்வதுடன், தனியாருடன் ஏர் இந்தியா நிறுவனமும் வளைகுடா நாடுகளுக்கு நேரடி விமானம் இயக்க முன்வர வேண்டும். மேலும், கோவை விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவேண்டும். விமான நிலையத்துக்கு நிரந்தர உரிமம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.

 இதையடுத்து, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கணபதி ராஜு கூறுகையில், "கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்கு மாநில அரசு முதலில் நிலத்தை கையகப்படுத்திக் கொடுக்கவேண்டும். நிலம் வழங்கப்பட்டால் இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளும். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய விமானப் போக்குவரத்துக் கொள்கை வகுக்கப்படும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.