ரயில்வே தடுப்பில் கன்டெய்னர் லாரி மோதல்
கோவை-பாலக்காடு சாலை, மரப்பாலத்தில் உள்ள ரயில்வே தடுப்பில் கன்டெய்னர் லாரி மோதியதில் புதன்கிழமை 6 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை- பாலக்காடு சாலையில் ரயில்வே பாலம் உள்ளது. இந்த ரயில்வே பாலம் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், அந்த வழியாக புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் வந்த கன்டெய்னர் லாரியின் மேல் பகுதி ரயில்வே பாலம் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள உயரமானத் தடுப்பில் மோதியது. ஆனால் லாரி அப்பகுதியில் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ரயில்வே தடுப்புகள் உடைந்து சாலையில் விழுந்தன.
தகவலறிந்து அங்கு வந்த மதுக்கரை காவல் துறையினர் கிரேன் உதவியுடன் இரும்புத் தடுப்புகளைஅப்புறப்படுத்தினர். இதனால் அந்தச் சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
