மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குப்பை சேகரிப்பு அதிகரிப்பு
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குப்பை சேகரிப்பு அதிகரித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


கோவை மாநகராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குப்பை சேகரிப்பு அதிகரித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி சார்பில் மத்திய அரசின் தூய்மை பாரதம் மற்றும் ஸ்வச் சர்வக்ஷான் திட்டத்தின் கீழ் மாநகராட்சியின் தரவரிசையை உயர்த்தும் வகையில் அலுவலர்களுக்கான திறனாக்கப் பயிற்சியைத் தொடங்கி வைத்து மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன் பேசியதாவது:
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தினமும் 800 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தன. மாநகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் தற்போது ஆயிரம் டன் அளவுக்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது 500 டன் குப்பை மண்புழு உரம் தயாரிப்பதற்காக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 600 டன் குப்பையை கையாளும் அளவுக்கு புதிய கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்ததன் மூலம் திடக் கழிவுகளை கையாளுவதற்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பல்வேறு தொழில்நுட்பங்களை மாநகராட்சி அதிகாரிகள் தெரிந்து கொண்டனர்.
தூய்மை பாரதம் திட்ட தரவரிசையில் 196-ஆவது இடத்தில் இருந்த கோவை மாநகராட்சி 16 இடத்துக்கு முன்னேறியுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 43 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நேரடியாக சென்று குப்பை சேகரிக்கப்படுகிறது என்றார்.
இதைத் தொடர்ந்து ஜெர்மன் நாட்டு உதவியுடன் கோவையில் அமைக்கப்படவுள்ள ஆய்வு மையம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...