குடிநீர் பிரச்னைக்காக சார்-ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு செட்டிபாளையம் பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியை அடுத்துள்ள கோலார்பட்டி-செட்டிபாளையம் கிராமத்தில் 1500- க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். அம்பராம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் இருந்து, இந்த கிராமத்துக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. ஆனால், கடந்த 20 நாள்களாகக் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் சார்-ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சார்-ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சந்திரன், பொதுமக்களிடம் பேச்சு நடத்தி குடிநீர் பிரச்னை சரிசெய்யப்படும் என தெரிவித்ததை அடுத்து கலைந்துசென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.