யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

முடீஸ் காவல் நிலையம் திறப்பு

வால்பாறை உட்கோட்டத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட  மூடிஸ் காவல் நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:26 am

DIN

வால்பாறை உட்கோட்டத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட  மூடிஸ் காவல் நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
வால்பாறையை அடுத்த முடீஸ் காவல் நிலையம் முடீஸ் எஸ்டேட் பஜார் அருகில் எஸ்டேட் நிர்வாகத்தினருக்குச் சொந்தமான  கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில்,  சோலையாறு அணைப் பகுதியில் ரூ. 81 லட்சம் மதிப்பீட்டில் முடீஸ் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.  இந்த புதிய கட்டடத்தை சென்னையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல்  ஆய்வாளர் (பொறுப்பு) நடேசன் தலைமையில்,  உதவி ஆய்வாளர்கள் சம்பத்குமார்,  முத்துசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.