தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

உடல் எடையை குறைப்பதன் மூலமாக முதுகு, மூட்டு வலியைத் தவிர்க்கலாம்: டாக்டர் டேவிட் வி.ராஜன்

உடல் எடை பராமரிப்பு, முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மூலம் இளம் பெண்களுக்கு ஏற்படும் முதுகு, மூட்டு வலியைத் தவிர்க்கலாம் என்று

Updated On :5 ஏப்ரல் 2018, 6:47 am IST

உடல் எடை பராமரிப்பு, முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மூலம் இளம் பெண்களுக்கு ஏற்படும் முதுகு, மூட்டு வலியைத் தவிர்க்கலாம் என்று ஆர்தோ ஒன் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் டேவிட் வி.ராஜன் தெரிவித்துள்ளார்.
   இது குறித்து அவர் கூறியதாவது: 
  எலும்புப் புரை, கீல்வாதம், முதுகு மற்றும் மூட்டு வலி போன்றவை தற்போது வயதானவர்களுக்கு மட்டும் இல்லாமல் நடுத்தர வயதினருக்கும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வளரும் பருவத்தில் தசை மற்றும் எலும்புகள் பலவீனமாக இருப்பதே காரணம். 20 வயதுடைய இளம் பெண்கள் தற்போது மூட்டு வலி மற்றும் முதுகு வலி போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள். பெண்களுக்கு உடலில் உள்ள ஹார்மோன் ஈஸ்ட்ரோஜென் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
  இது மூட்டுக்களைப் பாதுகாத்தல்,  வீக்கம், எலும்பு முறிவு போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தற்போது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதாலும் மூட்டு தொடர்பான பல்வேறு பிரச்னைகள் இளம் பெண்களுக்கு வருகிறது. இளம் வயதினர் சிகிச்சைக்கு வரும்போது மசாஜ் சிகிச்சை, ஸ்பா சிகிச்சை மற்றும் யோகா போன்ற பல்வேறு சிகிச்சை முறைகளை தேர்வு செய்கிறார்கள். கடுமையான கீல்வாதம் மற்றும் முதுகு வலி இருந்தால் மட்டுமே அவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
 சரியான உணவு முறை, உடற்பயிற்சி, தேவையான தூக்கம் மற்றும்  உடல் எடை பராமரிப்பு ஆகியவை இருந்தால் இளம் வயதில் மூட்டு, தசை தொடர்பான எந்தப் பிரச்னைகளும் வராமல் தடுக்கலாம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.