இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சாலை விபத்தில் விவசாயி சாவு

மேட்டுப்பாளையம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ராக்கிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி உயிரிழந்தார். 

Updated On :5 ஏப்ரல் 2018, 6:53 am IST

மேட்டுப்பாளையம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ராக்கிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி உயிரிழந்தார். 
அன்னூர் அருகே உள்ள ராக்கிபாளையத்தை சேர்ந்தவர் ஓதிசாமி. இவரது மகன் கணேசமூர்த்தி (37), விவசாயி. இவருக்குத் திருமணமாகவில்லை.   இந்நிலையில்,  காரமடை அருகே தாத்தம்பாளையம் கிராமத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு கணேசமூர்த்தி செவ்வாய்கிழமை இரவு சென்றுள்ளார். பின்னர் புதன்கிழமை காலை 7 மணி அளவில் அவர் தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பியுள்ளார்.  அப்போது,  பொகலூர் அருகே இந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்து கொண்டிருந்த லாரி மோதியது. 
இதில், கணேசமூர்த்தி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  
இது குறித்து சிறுமுகை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.