சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 6) இரண்டு அடுக்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுகிறது.
உதய் ரயில் பெட்டிகள் பொருத்தப்பட்ட இந்தச் சிறப்பு ரயில் 6-ஆம் தேதி பிற்பகல் 2.05 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இரவு 10.40 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயிலில் 8 குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட புதிய வகை இரண்டு அடுக்கு உதய் ரயில் பெட்டிகள் உள்ளன. 3 ரயில் பெட்டிகளில் உணவருந்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில், தலா 104 பயணிகளும், உணவு வசதி இல்லாத 5 ரயில் பெட்டிகளில் தலா 120 பயணிகளும் பயணிக்கலாம்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல் 5) காலை 8 மணி முதல் தொடங்கும் என்று தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் அழைப்பு!

பெனால்டி கொடுக்காதது ஏன்? இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்ட நடுவர்களை விமர்சிக்கும் ரசிகர்கள்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
நூற்றாண்டு காணும் கவிஞர் கண்ணதாசனின் வண்ணச் சித்திரங்கள்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


