கோவையில் வியாழக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு குறுந்தொழில் முனைவோர் சங்கம், ஆட்டோ தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக காட்மா சங்கத் தலைவர் எஸ்.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பொது நல அமைப்புகள் சார்பில் வியாழக்கிழமை நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு குறுந்தொழில் முனைவோர் சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் தொழிற்கூடங்கள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்கள் ஓடாது... இது குறித்து கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ சங்கக் கூட்டுக் கமிட்டி தலைவர் பி.கே.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் போராட்டத்துக்கு அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோ தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க இருப்பதால் கோவையில் வியாழக்கிழமை ஆட்டோக்கள் இயக்கப்படமாட்டாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சமூக நீதி வணக்கம்! முதல்வர் விஜய்

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! கட்டடங்கள் சேதம்!

தொடர்ந்து 3-வது நாளாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்? (ஜூன் 25)

பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


