உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பெண் வழக்குரைஞர்கள் கோவையில் ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் சிறுமி படுகொலையைக் கண்டித்து கோவையில் பெண் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:17 am IST

காஷ்மீர் சிறுமி படுகொலையைக் கண்டித்து கோவையில் பெண் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கோவை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார்.
இதில், காஷ்மீர் சிறுமி படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வட இந்தியாவில் தான் அதிக அளவில் நடைபெறுகின்றன. எனவே, குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண் வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.