கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் வலிப்பு நோய்க்கு நிரந்தரத் தீர்வு காண ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனையின் நரம்பியல், வலிப்பு நோய் நிபுணர் ராஜேஷ் சங்கர் ஐயர் கூறியதாவது:
மரப்பணுக்கள், பிறக்கும்போது குழந்தைக்கு ஏற்படும் பிராண வாவு குறைப்பாடு, மூளையில் ஏற்படும் கட்டிகள் போன்ற காரணங்களால் வலிப்பு நோய் ஏற்படுகிறது. இதில், ஆயிரம் பேரில் 10 பேருக்கு இந்த நோய் பாதிப்பு காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதில், 70 சதவீதம் பேருக்கு மாத்திரைகள் மூலமாக வலிப்பு நோயைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், 30 சதவீதம் பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை மூலமாக நிரந்தரத் தீர்வு காண முடியும். இந்த பாதிப்புக்கு சிகிச்சை எடுக்கத் தவறினால் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
சிலருக்கு வாரத்துக்கு மூன்று, நான்கு முறையும், மாதத்துக்கு இரண்டு முறையும் வலிப்பு ஏற்படும். இது, நோயின் பாதிப்பை பொருத்து சிலருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும். இதனால் கல்வி கற்க முடியாமலும், வேலைக்குச் செல்ல முடியாமலும், திருமணம் செய்து கொள்ள முடியாமலும், பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்படும்.
எனவே, எக்காரணங்களால் வலிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து உரிய பரிசோதனை முறையில் கண்டறிய பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் வலிப்பு நோய்க்கு என பிரத்யேகமாக ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலமாக வலிப்பு நோய் உடையவர்களுக்கு மூளையில் எந்தப் பகுதியில் பாதிப்பு உள்ளது என்பது குறித்து நவீன கருவிகள் மூலமாகத் துல்லியமாக கண்டறியப்படும்.
இதில் சிலருக்கு மருந்துகள் மூலமாகவே நோய் குணமடையச் செய்ய முடியுமா அல்லது அறுவை சிகிச்சை தேவையா என்பது குறித்துப் பல்வேறு பரிசோதனைகள் மூலமாகக் கண்டறிய முடியும். இந்த மையத்தின் மூலமாக கடந்த டிசம்பர் மாதத்தில் 9 வயது சிறுமி, 19 வயது இளைஞர், 30 வயது நபருக்கு வலிப்பு நோய்க்கு அறுவை சிகிச்சை மூலமாக நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளது.
இதுபோல, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தும் வகையில் பிரத்யேக சிகிச்சையும் அளிக்கப்படுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணவீக்க நாயகனின் அதிரடி தொடருகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


