கோவை இஸ்கான் ஜகந்நாதர் கோயிலில் நரசிம்ம ஜயந்தியையொட்டி மஹா நரசிம்ம யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை கொடிசியா அருகே உள்ள இஸ்கான் ஜகந்நாதர் கோயிலில் நரசிம்மர் அவதரித்த நாளையொட்டி நகரின் வளர்ச்சிக்காவும், தடைகள் நீங்கி மக்கள் சுபிட்சம் பெறவும் காலை 6 மணி முதல் 8 மணி வரையில் மஹா நரசிம்ம யாகம் நடைபெற்றது.
மேலும் இஸ்கான் கோயிலில் சந்திரா கல்வி மற்றும் கலாசார மையத்தின் சார்பில் நடைபெற்று வரும் திருப்பணிகள் தடையின்றி நடைபெற சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பகவான் நரசிம்மரின் லீலைகள் குறித்து தவத்திரு பக்தி வினோத சுவாமிகளின் சொற்பொழிவு நடைபெற்றது.
இதையடுத்து மாலையில் நரசிம்மர் திருவீதி உலாவைத் தொடர்ந்து மஹா அபிஷேகமும், கோவை சந்திரா குழுவினர் சார்பில் பக்த பிரகலாதரின் குணநலன்கள், பிரார்த்தனைகள் மற்றும் போதனைகளை விளக்கும் நாடகமும் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.