சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: வால்பாறையில் போலீஸார் வாகன சோதனை

வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை  அதிகரித்துள்ள நிலையில், மாநில எல்லையில் போலீஸார் வாகன சோனையில் ஈடுபட்டுள்ளனர்.
Updated on
1 min read

வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை  அதிகரித்துள்ள நிலையில், மாநில எல்லையில் போலீஸார் வாகன சோனையில் ஈடுபட்டுள்ளனர்.
வால்பாறையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது கேரள மாநில எல்லையான மழுக்குப்பாறை எஸ்டேட். எல்லைப்பகுதி என்பதால் வனத் துறையினர் அங்கு சோதனைச் சாவடி அமைத்துள்ளனர்.  கேரள வனப்பகுதி சாலை வழியாக சமூக விரோதிகள் தமிழகத்தினுள் நுழைவதைத் தடுக்க, அனைத்து எல்லைகளிலும் தமிழக போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வால்பாறை மழுக்குப்பாறை எஸ்டேட் சாலையிலும் போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
கடந்த சனிக்கிழமை காலைமுதல் கேரள மாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. கேரளத்திலிருந்து ஏராளமான வாகனங்கள் வந்துகொண்டே இருந்ததால், போலீஸாரும் வனத் துறையினரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com